Tuesday, September 4, 2007

கூடைக்குள் தேசம் 07

61
தேகம் மறைந்தவுடன்
தேசத்துப் புரிந்து விட்டது
தியாகத்தின் வேர்கள்.

62
அஸ்திவாரமிட்டதும்
அழுகையை நிறுத்திக்கொண்டது
கன்னியின் கர்ப்பப்பை.

63
வண்ண முடுத்து இதவாசனை பூசி
வீட்டு முற்றத்தில் விபச்சாரிகள்
பூக்கள்

64
இடம் பெயர்ந்து விட்டன
நேர்மை நியாயம் மகிழ்வு முதலானவை
புகுந்து விட்டது சந்தேகம்.

65
ஏய்! யாரங்கே ஆற்றில்
பாலைக் கொட்டிவிட்டு ஒலமிடுவது
நீர்வீழ்ச்சி

66
பாசறைப் பிரதேசத்துக்கு
உயிர் வந்து விட்டது-
சிற்பியின் வரவு.

67
சில்லறை விலையில்
சின்னச் சின்ன சவப்பெட்டிகள்
சிகரெட் பாக்கட்டுகள்.

68
வறுமை கொடுமை அடக்குமுறை
மலிந்த பூமியில் கொழுந்து விட்டது
தேயிலை.

69
தோலைச் சுவைத்து
கோலம் போட்டு வளர்ந்து
தேமல்.

70
பலரைக் குத்தி விட்டு
தண்டனையின்று தப்பிக்கொண்டான்
கவிஞன்.

71
கோடி கோடி வார்த்தைகள்
நாவுமில்லை இதழ்களுமில்லை
உன்னிரண்டு கண்கள்!

72
கடை திறக்கப்பட
முதல் பில்லில் போட்டார் வியாபாரி
நியாயமும் இரக்கமும்

73
ஜடத்துக்குக் கூட
நான்கு கால்கள்
நாற்காலி.

74
வாய்திறந்த வயிற்றுப்பசியை
உரித்த ஆடை அடைத்துவிட்டது
இனி சட்டப்பசி வாய்திறக்கும்.

75
எஞ்சிய ஒரு பிடிசோறு
பழங்கீரைக்கறியின் நெடி – பெண்ணே
உன் வாந்தியில் வறுமை மட்டுமா தெரிகிறது?

76
வெற்றியை கொணர்ந்தது
அறிவாறிகள் உயிர்த்தியாகம்
முட்டாள் ராச்சியம்.

No comments: