Monday, August 20, 2007

கூடைக்குள் தேசம் -01

01
கூடையைக் கனக்க
கனக்கச் சுமந்து சென்றார்கள்
உள்ளே இந்த தேசம்.

02
காரிருள் சப்தத்தில்
காதுகளிரண்டையும் வைத்தேன்
எத்தனை கவிதைகள்!

03
சங்கக் கூடுகள் அப்படியே
இருக்க – ஆவிகள் இடம் மாறின
இன்னும் சங்கச் சண்டை.

04
ஆயுள் முழுவதும் அந்த
ஏழைக்காகவே வாழ்ந்திருந்தது
இதயம்.

05.
எங்களுர் பள்ளம்
பக்கத்தூரின் மண் நிரப்பியது
அங்கே இப்போ பள்ளம்.

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் எல்லாமே அற்புதம் ஆனால் கூடவே இழையும் சோகமான ஓர்
விசயம் இதயம் கனக்க செய்கிறது...

சு.முரளிதரன் said...

நன்றி முத்துலெட்சுமி உங்களின் வருகையும் தருகையும் தொடரவே வேண்டுகின்றேன்.

J S Gnanasekar said...

//ஆயுள் முழுவதும் அந்த
ஏழைக்காகவே வாழ்ந்திருந்தது
இதயம்//

நன்றாக இருக்கிறது.

-ஞானசேகர்