Friday, August 24, 2007

கூடைக்குள் தேசம்-04

16
காற்றுக்குள் தான் எத்தனை
எத்தனை நந்தவன அஸ்திவாரங்கள்
மகரந்தம்.

17
நான் பார்த்து விபத்தானது
முகமெல்லாம் இரத்தம்
நாணம்.

18
எட்ட இருக்கு மட்டும்
இங்கொன்றும் எரியாது
சூரியனே.

19
சேவல் கூவியதும்
திடுக்கிட்டு எழுந்தான்
வோட்டுக்களிடையே உறங்கியவன்.

20
எத்தனை மரணங்களின்
கல்லறைகள்
மருந்து வில்லைகள்.

1 comment:

மாயா said...

மிக நன்றாயிருக்கின்றன தொடர்ந்து எழுதுங்கள்