Sunday, September 2, 2007

கூடைக்குள் தேசம் 05

41
எச்சரிக்கை! மலைகள் மீது
நடமாடிக் கொண்டிருக்கின்றன
எரிமலைகள்.

42
ஆலமரமும் நாணலும்
கதை கேட்டு முறைத்தது
குழந்தையின் முதுகெலும்பு

43
தேயிலைக்காட்டு துயர் மூச்சில்
சரிந்தன மனிதங்கள்
நின்றன மரங்கள்.

44
ஒருடல் தான்-
இலட்சியம் இரண்டாக்கியது
பாதைகள்

45
புதியவன் அழுவாமையால்
பழையவர்கள் அழுகின்றார்கள்
இந்தசிசு – பிரசவவிடுதி.

46
வடிந்த இரத்தம் தான்
எத்துணை சுவை பூனைக்கு
நாக்கில் காயம்.

47
தேடத்தொடங்க திறந்தவன்
காணாமலே போய்விட்டான்
அருமையான புத்தகம்.

48
பிணங்கள் இன்னும்
அழுகவில்லை
பனிச்சிகரத்தில் யுத்தம்.

49
ஏழையின் எத்தனைக்
கனவுகள் கலைந்தன
மூட்டைப்பூச்சிகள்.

50
நிலவுக்காக அழுவதை
நிறுத்திக்கொண்டது லயக்குழந்தை
ரொட்டி முன்னே.

1 comment:

கானா பிரபா said...

தொடர்ந்து காத்திரமாகத் தருகின்றீர்கள், நன்றி